பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் முதல் முறையாக திருநங்கை போட்டியாளர்..!

 
நமீதா மாரிமுத்து

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் முதல் முறையாக திருநங்கை ஒருவர் போட்டியாளராக புதிய சீசனில் களமிறங்கியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பிரமாண்டமாக துவங்கியுள்ளது. முன்னதாக நிகழ்ச்சியில் தோன்றிய கமல்ஹாசன், புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ள பிக்பாஸ் வீட்டை பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

பிறகு நிகழ்ச்சி மேடைக்கு வந்த அவர், போட்டியாளர்களை அறிமுகம் செய்துவைக்க துவங்கினார். கானா பாடகியும் திரை பிரபலமுமான இசைவாணி முதல் போட்டியாளராக மேடைக்கு வந்தார்.


அவருக்கு பிறகு சின்னத்திரை சீரியல்களில் நடித்து வரும் ராஜு இரண்டாவது போட்டியாளராக நிகழ்ச்சிக்குள் வந்தா. ஜெர்மனியைச் சேர்ந்த தமிழரான மதுமிதா மூன்றாவது போட்டியாளராக, யூ-ட்யூப் தொகுப்பாளரும் நடிகருமான அபிஷேக் நான்காவது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர்.

ஐந்தாவது போட்டியாளராக பிரபல மாடல் நமீதா மாரிமுத்து அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். இதன்மூலம் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள முதல் திருநங்கை என்கிற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.
 

From Around the web