உதயநிதி படத்தில் பிக்பாஸ் வெற்றியாளர்..!

 
உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆரவ்

புதியதாக மகிழ்திருமேனி இயக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் நிலையில், அந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள படங்களில் மும்முரமாக நடித்து வருகிறார் உதயநிதி. அதன்படி மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் அவர் நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஆரவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவருடைய வரவு படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உருவாக்கியுள்ளது.

உதயநிதியுடன் நடிப்பதை தொடர்ந்து, அவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஆரவ். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

From Around the web