மீண்டும் ஒ.டி.டி ரிலீஸுக்கு தாவிய பெரிய பட்ஜெட் படங்கள்- தியேட்டர் உரிமையாளர்கள் அதிர்ச்சி..!

 
மீண்டும் ஒ.டி.டி ரிலீஸுக்கு தாவிய பெரிய பட்ஜெட் படங்கள்- தியேட்டர் உரிமையாளர்கள் அதிர்ச்சி..!

கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து மீண்டும் பல தமிழ் திரைப்படங்கள் நேரடியாக ஓ.டி.டி-யில் வெளியாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்துள்ளன.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது, மத்திய சுகதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, முதலாவது அலையை விட தற்போது இரண்டாவது கொரோனா அலை வீரியம் மிகுந்ததாக உள்ளது என தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் மார்ச் இறுதி வாரத்தில் ஊரடங்கு நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அது செப்டம்பர் மாதம் வரை தொடர்ந்து. பல்வேறு தொழில்கள் முடங்கின. ஒவ்வொரு தனிமனிதனும் இதனால் பெரும் பாதிப்புகளை சந்திக்க நேரிட்டது.

சினிமாத்துறை முற்றிலும் முடங்கியது. அதை நம்பி பணியாற்றக்கூடியவர்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இதனால் சிறிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை பெரும்பாலான திரைப்படங்கள் நேரடியாக ஓ.டி.டி தளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியாகின. செப்டம்பருக்கு பிறகு அறிவிக்கப்பட்ட ஊரங்கு தளர்வுகளை தொடர்ந்து திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டன. கொஞ்சம் கொஞ்சமாக படங்கள் திரையரங்குகளில் வெளியாக தொடங்கின.

இந்நிலையில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு மீண்டும் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவார்களா என்பது தெரியவில்லை.

இதை கருத்தில் கொண்டு பெரிய பட்ஜெட் படங்கள் ஓ.டி.டியில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் சிவகார்த்திகேயனின் டாக்டர், சிம்புவின் மாநாடு, தனுஷின் ஜகமே தந்திரம் உள்ளிட்ட பல திரைப்படங்கள் நேரடியாக ஒ.டி.டி-யில் வெளியாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
 

From Around the web