#BIG NEWS : பிரபல பாலிவுட் நடிகருக்கு துப்பாக்கி குண்டு பாய்ந்தது..!

 
1

மும்பை போலீஸ் அதிகாரி வெளியிட்ட தகவலின்படி, பிரபல பாலிவுட் நடிகரும், சிவசேனா கட்சி உறுப்பினருமான கோவிந்தா இன்று காலை கொல்கத்தாவிற்கு வேலை நிமித்தமாக கிளம்பிய போது தன்னிடம் உள்ள லைசென்ஸ் துப்பாக்கியை பரிசோதனை செய்துள்ளார்.

அப்போது துப்பாக்கி தவறுதலாக சுட்டதில், நடிகர் கோவிந்தாவின் காலில் குண்டு பாய்ந்தது.உடனடியாக சிகிச்சை பெற அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

நடிகர் கோவிந்தா உடல்நிலை குறித்து அவரது மேலாளர் சாஷி சின்ஹா கூறுகையில், மருத்துவர் கோவிந்தாவின் கால் பகுதியில் இருந்து துப்பாகி குண்டை எடுத்துவிட்டனர். கோவிந்தா தற்போது மருத்துவமனையில் நலமாக உள்ளார் என கூறியுள்ளார். 

From Around the web