வைரலாகும் பிக்பாஸ் 7 போட்டியாளர்களின் லிஸ்ட்!

 
1

பிக் பாஸ் இந்த நிகழ்ச்சிக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். இதன் 7வது சீசன் அடுத்த மாதம் முதல் துவங்குகிறது.இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக கமல் ஹாசன் ரூ.130 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது…அதனை போல இன்னும் நிறைய தகவல்கள் வந்து கொண்டு இருக்கிறது.

மேலும் இந்த முறை பிக் பாஸ் வீட்டில் புதிய விதிமுறைகள் இருக்க போகிறது. ஏனென்றால் இந்த முறை ஒரு வீடு அல்ல இரண்டு வீடு என ப்ரோமோ வீடியோவில் கமல் ஹாசன் கூறியிருக்கிறார்.இதனால் கண்டிப்பாக பல விதிமுறைகள் புதிதாக இருக்கும்…இதை எப்படி போட்டியாளர்கள் கையாளப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இன்னும் 6 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இதில் கலந்துகொள்ளப்போகும் போட்டியாளர்கள் யார்யார் என சில தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது அது வைரலாக பேசப்பட்டும் வருகிறது.

இந்த சூழலில் பிக்பாஸ் போட்டியாளர்கள் இவர்கள்தான் என்று கூறப்படும் 10 பேர் கொண்ட லிஸ்ட் வெளியாகியுள்ளது. அவர்கள் பின்வருமாறு-

ரவீனா
பப்லு பிரித்விராஜ்
ஜோவிகா
இந்தரஜா
மூன்நிலா
தர்ஷா குப்தா
சத்யா
குமரன்
விஷ்ணு
அனன்யா

From Around the web