ஹீரோவாக களமிறங்கும் பிக்பாஸ் அமீர்..!!

 
1

சினிமா நடன இயக்குனர் அமீர் ‘பிக்பாஸ்‘ நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம்  பிரபலமானார். தற்போது அமீர் புதிய படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை அவரே இயக்குகிறார். இதில் நாயகியாக ‘பிக்பாஸ்‘ நிகழ்ச்சியில் வந்த பாவனி நடிக்கிறார். பிக்பாஸில் இவர்களின் ஜோடிப்பொருத்தம் எல்லோராலும் பாராட்டப்பட்டது. ‘துணிவு‘ படத்திலும் நடித்து இருந்தனர். தற்போது இருவரும் நாயகன்-நாயகியாக அடுத்த கட்டத்துக்கு உயர்ந்துள்ளனர். இதில் மன்சூர் அலிகான், காயத்ரி ஜெயராம், சுரேஷ் சக்கரவர்த்தி, சாதனா, வி.டி.வி கணேஷ், அலீனா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இப்படம் குறித்து அமீர் கூறும்போது, “நான் பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி, தற்போது புதிய படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடிக்கிறேன். இந்தப் படம் காதல், காமெடி கலந்து தயாராகிறது. தற்கால இளைஞர்கள் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையிலும் இருக்கும். இந்தப் படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும்“ என்று கூறியுள்ளார்.

From Around the web