புது காரை வாங்கிய பிக்பாஸ் பிரபலம்..! குவியும் வாழ்த்துக்கள் 

 
1

கடந்த ஆண்டு இடம்பெற்ற பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்தவர் தான் அர்ச்சனா. சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வந்தாலும் இவருக்கு புகழை பெற்று கொடுத்தது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தான்.இவர் பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற பிறகு அந்த வீட்டில் ஆட்டமே சூடு பிடித்தது.

இந்த நிகழ்ச்சியின் இறுதியில் டைட்டிலையும் அர்ச்சனா தான் வின் பண்ணினார். இவருக்கு அமோக ஆதரவு கிடைத்தது. அத்துடன் பிரதீப்பின் வாக்குகள் அத்தனையும் அர்ச்சனாவுக்கு தான் கிடைத்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெற்றி பெற்ற அர்ச்சனா, டிமான்டிக் காலனி இரண்டாவது பாகத்தில் நடித்திருந்தார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி  வைரலானது.

இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் அர்ச்சனா தனது குடும்பத்தினருடன் சென்று புதுகார் ஒன்றை வாங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

From Around the web