பிக் பாஸ் பிரபலம் மகேஷ் காந்தி உயிரிழப்பு!

 
1

பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் மகேஷ் காந்தி.இவர் பிரபல தெலுங்கு நடிகர் மட்டுமல்ல . குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர். இவருக்கு வயது 43. இவருக்கு தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. பன்முகத்திறமை கொண்ட இவர் சமீபத்தில் நெல்லூரிலிருந்து ஹைதராபாத் செல்லும்போது, கார் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த அவர், கடந்த இரண்டு வாரங்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். அவரது மறைவை கேட்ட அவருடைய ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இவர் 2015ல் வெளிவந்த ‘பெசராட்டு’ என்ற படத்தை இயக்கியவர். மகேஷ் காத்தி ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்று புகழ் பெற்றவர். சமூக வளர்ச்சிக்கு அறிவியல் ரீதியான பார்வையே சிறந்தது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் மகேஷ் காந்தி. இவரது மறைவிற்கு தெலுங்கு திரையுலகமும் , ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From Around the web