அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி பேசி கொந்தளித்த பிக் பாஸ் பிரபலம்..!
பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி மட்டும் இல்லாமல் சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பிலும் அடிக்கடி குரல் கொடுத்து வருவதில் ஆர்வம் காட்டி வருகின்றார்சனம் செட்டி. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றார்கள்.
இந்த நிலையில் மலையாள சினிமாவில் மட்டும் இல்லை தமிழ் சினிமாவிலும் பெண்களுக்கு எதிரான தொல்லைகள் இருக்கு. தன்னிடம் யாராவது அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டால் செருப்பால் அடிப்பேன்டா நாயே என்று தைரியமாக சொல்வேன் என பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சனம் செட்டி ஆவேசமாக பேசியுள்ளார்.
அதாவது கொல்கத்தா மருத்துவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான அனுமதியை கேட்ட சனம் செட்டி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வந்துள்ளார்.
இதன்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், மருத்துவமனையில் டாக்டருக்கு நடந்த விஷயம் மட்டுமில்லை நாளாந்தம் இது போன்ற பல விஷயம் நடந்து கொண்டுள்ளன.
சொல்வதற்கே கஷ்டமாக உள்ளது. பெண்களுக்கு எங்கேயும் பாதுகாப்பு இல்லை. குடும்பத்திற்கு உள்ளே பாதுகாப்பு இல்லை. குடும்ப நபர்களை கூட நம்ப முடியாத சூழ்நிலைதான் தற்போது காணப்படுகின்றது கடந்த ஒரு வாரத்தில் நான்கு வழக்குகள் பதிவாகியுள்ளன.
கொல்கத்தாவில் நடந்த பிரச்சனைக்கு ஏன் இங்கே போராட வேண்டும் என்று கேட்டால், நேற்று கிருஷ்ணகிரியில் 13 மாணவர்களுக்கு இவ்வாறான கொடுமை நடந்துள்ளது. அதில் அப்பள்ளியின் முதல்வரும் சம்பந்தப்பட்டுள்ளார். அட்ஜஸ்ட்மென்ட் கேரள சினிமாவில் மட்டும் இல்லை தமிழ் சினிமாவிலும் உள்ளது. என்னிடம் இப்படி கேட்டால் அந்த இடத்திலேயே செருப்பால் அடிப்பேன் நாயே என்று சொல்லி இருக்கேன். அதற்காக சினிமாவில் எல்லாரும் அப்படித்தான் என்று சொல்லவில்லை ஒழுக்கமானவர்களும் உள்ளார்கள்.
தினம் தினம் நடக்கும் பெண்களுக்கு எதிரான சீண்டல்களுக்கு பயந்து பெண்களை வெளியில் அனுப்பாமல் அந்த ஆடையை போடாதே, யாரையும் நம்பாதே என்று சொல்லி வளர்த்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அடிப்படை மாற்றம் ஆண்களில் இருந்து தான் வர வேண்டும். அதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் அதற்காகத்தான் இந்த போராட்டம் இதுதான் சரியான நேரம் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.