இணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் பிரபலத்தின் சிறு வயது புகைப்படம்..!
Feb 19, 2025, 08:05 IST

பிக் பாஸ் 8ல் போட்டியாளராக களமிறங்கி, காதல் சர்ச்சையில் சிக்கி, டாப் 3ல் வந்த பிரபலத்தின் சிறு வயது புகைப்படம் தான் இது.ஆம், விஜே விஷாலின் சிறு வயது புகைப்படம்தான் இது.
பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பிரபலமான விஜே விஷால், பின் பிக் பாஸ் 8ல் 23 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கினார். இந்த போட்டியில் 106 நாட்களை கடந்து டாப் 3ல் இடம்பிடித்தார்.
இவருக்கு நடிப்பதை தாண்டி இயக்குநர் ஆகவேண்டும் என்கிற கனவு உள்ளது என பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருந்தார். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளிவரும் என அவருடைய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்