விஷால் உடனான காதல் பற்றி பிக் பாஸ் தர்ஷிகா சொன்ன பதில்..!
விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 79 நாட்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, ரவீந்தர் தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டு வருவதால் போட்டியாளர்கள் மத்தியில் போட்டியும் பொறாமையும் வெடித்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் கடந்த வாரம் கொடுத்த டாஸ்கில் ராணவுக்கு கடந்த பயங்கரமாக அடிபட்டு இருந்தது. சிகிச்சைக்கு பின் ராணவ் மூன்று வாரத்திற்கு ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று மருத்துவர் சொன்னதாக பிக் பாஸ் கூறியிருந்தார். இதை அடுத்து கேப்டன்சி டாஸ்க்கில் முத்துக்குமரன், பவித்ராவுக்காக விட்டுக் கொடுத்திருந்தார். இதனால் பிக் பாஸ் கேப்டன்சி டாஸ்கை ரத்து செய்து இருந்தார்.
இதனால் முத்துக்குமரன் மனமுடைந்து மன்னிப்பு கேட்டும் பிக் பாஸ் அதைக் கண்டு கொள்ளவே இல்லை. மேலும், இந்த 12 வது வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் அன்ஷிதா, வது ஜாக்லின், மஞ்ஜரி, ராணவ், விஷால், பவித்ரா ஆகியோர் பெயர்கள் இடம் பிடித்து இருக்கிறது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் டாஸ்க் நடைபெறுகிறது.இது ஒரு பக்கம் இருக்க, பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் காதல் ஜோடி வருவது வழக்கம் தான். ஆரவ்- ஓவியா, கவின் லாஸ்லியாவை தொடர்ந்து இந்த எட்டாவது சீசனில் விஷால்-தர்ஷிகா காதல் ஜோடி உருவாகி இருந்தது.
இவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கிய சில நாட்களிலேயே தர்ஷிகா நிகழ்ச்சியை விட்டு வெளியேறி விட்டார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தர்ஷிகா விஜய் பாஸ் பிக் பாஸ் அன்லிமிடெட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அதில் அவரிடம் தொகுப்பாளர், விஷாலை நீங்கள் காதலிக்கிறீர்களா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு தர்ஷிகா, விஷால் மீது கிரஷ் இருக்கிறது. அவரை பிடிக்கும். ஆனால், நான் காதலிக்கவில்லை என்று வெளிப்படையாக கூறுகிறார்.