மீண்டும் சீரியல் பக்கம் திரும்பும் பிக்பாஸ் ஜூலி... என்ன சீரியல் தெரியுமா ?

 
1

விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பான ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'தென்றல் வந்து என்னை தொடும்'. இந்த சீரியலில் வினோத் பாபு மற்றும் பவித்ரா ஜனனி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் தற்போதைய கதைப்படி, செய்யாத குற்றத்திற்காக வெற்றிக்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது. 

இதையடுத்து ஆறு ஆண்டுகள் கழித்து சீரியல் கதைக்களம் காட்டப்படுகிறது. அதில் ஜெயில் தண்டனை முடித்து வெற்றி வெளியே வருகிறார். அதன்பிறகு தனது மனைவி மற்றும் குழந்தையை சந்தித்து குடும்பத்துடன் என்ற‌ எதிர்பார்ப்புடன் சீரியல் நகர்கிறது. இந்நிலையில் இந்த சீரியலில் சிறப்பு தோற்றத்தில் பிக் பாஸ் ஜூலி தோன்றவுள்ளார். 

bigboss julie

வழக்கறிஞராக சீரியலில் தோன்றவுள்ள ஜூலி, ஜெயில் இருந்து வெளியே வரும் வெற்றிக்கு உதவி செய்யும் கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார் ஜூலி. தற்போது அவர் சீரியலில் என்ட்ரி கொடுக்கவுள்ளது  ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஏற்கனவே அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்  ‘தவமாய் தவமிருந்து’ சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

From Around the web