கோலாகலமாக நடந்து முடிந்த பிக் பாஸ் கவின் திருமணம்..!
Aug 21, 2023, 08:05 IST
வெள்ளித்திரையில் நட்புனா என்னன்னு தெரியுமா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் கவின். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு இன்னும் பிரபலமடைந்தார்.அப்போது அந்த வீட்டில் போட்டியாளராக கலந்து கொண்ட லாஸ்லியாவை உயிருக்கு உயிராக கவின் காதலித்தார். ஆனால், நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் காதல் அப்படியே பிரேக்கப் ஆனது.
அதன் பிறகு தொடர்ந்து வெள்ளித்திரையில் வெற்றி படங்களாக கொடுத்து வரும் கவின் நீண்ட நாள் காதலில் மோனிகாவை கரம் பிடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இதை அடுத்து இன்று இவர்கள் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமண நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், அதில் கலந்து கொண்ட விஜய் டிவி புகழ் கவின் மற்றும் மோனிகா தம்பதியினருக்கு பூங்கொத்து கொடுத்த புகைப்படங்கள் வெளியாகின.
நடிகர் கவினுக்கு கல்யாணம் ஆனது தெரிய வந்த நிலையில், சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் கவினுக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பட்டு வேட்டியில் நடிகர் கவின் மாப்பிள்ளை கோலத்தில் செம அழகாக இருக்க அவரது பக்கத்தில் மாலையும் கழுத்துமாக மோனிகாவும் செம க்யூட்டாக இருக்கிறார்.
திருமண புகைப்படங்களை கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
 - cini express.jpg)