பிக்பாஸ் மாயாவை கலாய்த்த ரசிகர்கள்..! ஃபேன் வாங்க காசில்லை.. நியூயார்க்கை சுத்தி பார்க்க காசிருக்கா? 

 
1

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் மாயா என்பதும் இவர் பூர்ணிமா உள்பட ஒரு சிலரை வைத்து கேங்காக விளையாடினார் என்பதும் அவ்வாறு செய்த சதியின் காரணமாக தான் பிரதீப் அந்தோணி வெளியேற்றப்பட்டார் என்பதும் இந்த நிகழ்ச்சியை பார்த்து அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

இதன் காரணமாக அதி புத்திசாலியாக இருந்தாலும் மாயாவுக்கு நெகட்டிவ் இமேஜ் தான் கிடைத்தது என்பதும் ஆனால் அதே நேரத்தில் நெகட்டிவ் இமேஜ் உடன் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த போதிலும் அவருக்கு சினிமா வாய்ப்புகள் அதிகமாக கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் மாயாவுக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் அவர் சற்றுமுன் தனது இன்ஸ்டா  பக்கத்தில் நியூயார்க் தெருவில் ஜாலியாக நடந்து செல்லும் வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த பதிவுக்கு ’நிற்காத பாட்டாக உன் காதில் நான்’ என்று கேப்ஷனாக அவர் அளித்துள்ள நிலையில் பல கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

அவற்றில் ’உங்கள் வீட்டில் ஃபேன் வாங்க கூட காசு இல்லை என்று சொன்ன நீங்கள் தற்போது நியூயார்க் தெருக்களில் சுற்ற மட்டும் காசு இருக்கிறதா? என்று கமெண்ட்  பதிவாகி உள்ளது. பிக் பாஸ் வீட்டில் மாயா இருக்கும் போது தன்னுடைய வீட்டின் ஹாலில் ஃபேன் இல்லை என்றும், அதனால் ஏசி மாட்ட வேண்டும் என்றும் அவர் கூறியது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அழகே பொறாமைப்படும் பேரழகி என்றும், நீங்கள் ஒரு ராணி மாதிரி இருக்கிறீர்கள் என்றும் பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களும் இந்த வீடியோவுக்கு பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web