இவருக்கு ஜோடியாக அனிகாவா...?? எதிர்பார்க்காத அப்டேட்..!!

கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் குழந்தை நட்சத்திரம் அனிகா சுரேந்திரன். இவர் மலையாளத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாலும், தமிழில் அறிமுகமான பின்னர் இவருக்கு பிரபலம் கிடைத்தது.
தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் படத்திலும் அஜித் மற்றும் நயன்தாராவுக்கு மகளாக நடித்திருந்தார். இதையடுத்து தமிழ் சினிமாவில் அனிகாவை அஜித்தின் மகள் என்றே முத்திரை குத்திவிட்டனர். பல ஊடகங்களும் அவரை அப்படியே குறிப்பிட்டு எழுதின.
முன்னதாக குழந்தை நட்சத்திரமாக இருந்த அனிகா, தற்போது வளர்ந்து பெரியவராகிவிட்ட நிலையில் ஹீரோயினாகிவிட்டார். இதுவை தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் கதாநாயகியாக நடித்த அவர், முதன்முறையாக தமிழில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 3 டைட்டின் வின்னரான முகின் வேலன் படத்தின் மூலம் ஹீரோவானார். அதையடுத்து அவர் நடிக்கவுள்ள படத்தில் கதாநாயகியாக அனிகா நடிக்கிறார். இந்த படத்தையும் வேலன் படத்தை இயக்கிய கவின் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கான ஷூட்டிங் சென்னை, நாகர்கோவில், மார்த்தாண்டம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறுகிறது. த்ரில் கதையம்சம் கொண்ட இந்த கதையில் காதலுக்கும் முக்கியத்துவம் இருக்கும். முகின் மற்றும் அனிகாவுடன் ஆஷா சரத், ஆதித்யா கதிர் முக்கிய் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விரைவில் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.