வைரலாகும் பிக்பாஸ் பவித்ராவின் பதிவு!

`தென்றல் வந்து எனைத் தொடும்' தொடருக்குப் பிறகு எந்த சீரியலில் நடிக்கப் போகிறார் எனப் பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று தனது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார் பவித்ரா ஜனனி.
பவித்ரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு அவருடைய நண்பரும் பிக்பாஸ் போட்டியாளர்களுள் ஒருவருமான ரயானுடன் பர்வதமலைக்குச் சென்றிருக்கிறார். அந்தப் புகைப்படத்தை அவர் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு பல்வேறு எதிர்மறையான கமென்ட்கள் வந்த நிலையில் பவித்ரா அது குறித்து அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில்,
" வணக்கம். அனைவரும் நலம் என நம்புகிறேன். சில விஷயங்களை விரைவாக தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் அதனை புரிந்து கொண்டு நடப்பீர்கள் என நம்புகிறேன். எனது தனிப்பட்ட வாழ்க்கை, நண்பர்கள் மற்றும் அவர்களுடன் பயணம் செய்வது என் தனிப்பட்ட விருப்பம். சூழலைப் புரிந்து கொள்ளாமல் ஒரு சிலர் என்னைப் பற்றி கருத்துகளை பதிவிடுவது மிகவும் வேதனையளிக்கிறது. விரும்பத்தகாத வகையில் வேறொருவரையோ அல்லது வேறொரு ஃபேன் பேஜையோ குறிப்பிட்டு பதிவிடும் கமென்ட்ஸ்களை என் பக்கத்திலிருந்து நீக்கிவிட்டேன்.