பிக் பாஸ் சம்யுக்தா போட்ட அதிரடி போஸ்ட்..! இப்போதுதான் நிம்மதி கிடைச்சிருக்கு!

கடந்த வருடத்தில் அதிகமான சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் விவாகரத்து செய்தியை அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருந்தனர். தற்போதைய சூழ்நிலையில் விட்டுக் கொடுக்கும் மனநிலை மற்றும் தம்பதிகளுக்கு இடையே நிலவும் ஈகோ பிரச்சனையால் விவாகரத்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் பிக் பாஸ் பிரபலம் சம்யுக்தாவும் தன் விவாகரத்து செய்தியை அறிவித்திருக்கிறார். ஆனால் இவருடைய விவாகரத்து வேற மாதிரியான சூழ்நிலையில் அமைந்திருக்கிறது.
சம்யுக்தாவின் சொந்த ஊர் கோயம்புத்தூர் தான் ஸ்கூல் காலேஜ் எல்லாமே அங்கேயேதான் படிப்பை முடித்திருக்கிறார். கல்லூரி படிக்கும் போதே மாடலிங்கில் கவனம் செலுத்தி வந்த இவர் பெற்றோர் விருப்பப்படி கார்த்திக் சங்கர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ராயன் என்ற ஒரு மகனும் உள்ளார்.
சம்யுத்தா சில திரைப்படங்களிலும் சீரியலிலும் நடித்திருந்தாலும் அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த கால வாழ்க்கையில் இருந்து தான் முன்னேறி வருவதாக பதிவு வெளியிட்டிருக்கிறார்.
அதோடு தன்னுடைய விவாகரத்து செய்தியை பகிர்ந்து இருக்கிறார். இந்த 2025 இறுதியாக என்னுடைய பேப்பர் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டேன். எப்போதும் அல்லாத இல்லாத அளவிற்கு இப்போது வலிமையானவளாக உணர்கிறேன் என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்பு சம்யுக்தா ஒரு பேட்டியில் பேசும்போது, தன்னுடைய கணவர் தனக்கு வேறு ஒரு பெண்ணுடன் உறவு இருக்கிறது என்று வெளிப்படையாகவே கூறினார் என்று பேசி இருக்கிறார்.அதோடு கொரோனா லாக்டவுனில் என்னுடைய கணவர் வேறொரு பெண்ணுடன் துபாயில் நான்கு வருடங்களுக்கு மேலாக இருப்பது தெரிய வந்தது. அப்போது கொரோனா லாக்டவுன் என்பதால் என்னால் அங்கு செல்ல முடியவில்லை. அந்த நேரத்தில் எனக்கு ஒரு மகனும் இருந்தான். என்னுடைய மகனை வளர்க்கவா அல்லது என்னுடைய திருமண வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ளவா? நான் என்ன செய்ய வேண்டும் என்ற பெரிய குழப்பத்திலிருந்தேன்.
பிறகு எனக்கு துரோகம் செய்தவர் முன்பு நான் வாழ்ந்து காட்ட வேண்டும் என்னுடைய மகனை சிறப்பாக வழி நடத்த வேண்டும் என்று முடிவு செய்தேன். அந்த நேரத்தில் தான் எனக்கு விஜே பாவனா கிருஷ்ணன் அறிமுகமானார். இருவரும் ஒரே அப்பார்ட்மெண்டில் இருந்தோம். ஆரம்பத்தில் ஹாய் பாய் என்று அளவில்தான் எங்களுடைய நட்பு இருந்தது. கொரோனா காலகட்டத்தில் வீட்டுக்குள்ளே முடங்கி இருந்த நேரத்தில்தான் அவரோடு பேசுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் என்னுடைய குடும்பத்தை பற்றி கேட்க நான் அவரிடம் எல்லா விஷயத்தையும் பகிர்ந்து இருந்தேன். அப்போது அவர் எனக்கு பல அறிவுரைகளை கூறினார். அதற்குப் பிறகு நாங்கள் இருவரும் நட்பாக மாறிவிட்டோம். அப்போது எனக்கு எட்டாவது ஆண்டு திருமண நாள் வந்தது எனக்கு நிறைய ஆலோசனைகளை அவர்தான் கொடுத்தார். நான் என்ன செய்ய விரும்புகிறேனோ அதை செய்ய சொன்னார். அப்போதுதான் நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போனேன். இன்று உலகம் அறியும் ஒரு நடிகையாக மாறி இருக்கிறேன் என்று அந்த பேட்டியில் சம்யுக்தா பேசியிருந்தார்.
அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கலந்து கொள்வதற்கு முன்பு நடிகை ராதிகா நடித்த சந்திரகுமாரி சீரியலில் சம்யுக்தா நடித்திருந்தார். அதுபோல காபி வித் காதல், வாரிசு, துக்ளக் தர்பார் போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.