பிக்பாஸ் ஷூட்டிங் ஆரம்பம்.. ஹோஸ்ட் யாரு தெரியுமா?
வருடத்திற்கு ஒருமுறை 100 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி பிக்பாஸ்.இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் அனைவரும் விரும்பி பார்க்க கூடிய நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். இது வரை இந்த நிகழ்ச்சியில் 7 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. தற்போது அடுத்து 8 வது சீசன் அடுத்த மாதம் வரவிருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் இன்னும் சில நாட்களில் ஆரம்பமாக உள்ள நிலையில் இதனை தொகுத்து வழங்கப் போவது யார் என்ற கேள்விக்கு இதுவரையில் அதிகாரபூர்வமாக பதில் கிடைக்கவில்லை.
ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் பற்றிய பெயர் விபரங்கள் வெளியான வாரே உள்ளன. அதிலும் முக்கியமாக பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த அருண் மற்றும் குக் வித் கோமாளி பிரபலமான ஷாலினி சோயா, அஸ்வின் போன்ற பலரது பெயர்கள் வெளியாகியுள்ளன.
அதுமட்டுமன்றி பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை தொகுத்து வழங்கப் போவது நயன்தாராவா இல்லை விஜய் சேதுபதியா என ரசிகர்கள் மனதில் இறுதியாக கேள்வி காணப்படுகின்றது.
இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி பாண்டிச்சேரியில் பிக் பாஸ் படப்பிடிப்பிற்காக சென்றுள்ள காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.