பிக்பாஸ் ஆரம்பிச்சவுடனே சண்டையை மூட்டி விட்ட பிக் பாஸ்..!
ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் 7 என்று சொல்லலாம்.வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு வாரத்திற்கு பிறகு தான் கேப்டன் பதவிக்கான போட்டி நடத்தப்படும். ஆனால், இந்த முறை முதல் நாளே கேப்டன் பதவிக்கான சண்டையை மூட்டிவிட்டுள்ளார்.
கூல் சுரேஷ் வந்ததுமே பிக் பாஸ் வீட்டின் முதல் கேப்டன் நீங்க தான். ஆனால், அடுத்து உள்ளே வரும் போட்டியாளரின் ஐந்து நிமிடம் விவாதம் செய்து அந்த கேப்டன் பதவியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை கூறினார் பிக் பாஸ்.
இதையடுத்து, இரண்டாவது போட்டியாளராக உள்ளே நுழைந்த பூர்ணா ரவி, கூல் சுரேஷூடன் விவாதம் செய்தார். இன்றைய இளைய தலைமுறைக்கு விட்டுக்கொடுங்கள் என்றார். மேலும், நீங்கள் வெளியில் பிரபலம், என் திறமையை நிரூபிக்க வாய்ப்பு கொடுங்கள் என்று கூறியதால் கூல் சுரேஷ் கேப்டன் பதவியை பூர்ணாவிற்கு விட்டுக்கொடுத்தார். அதன் பின் வந்த ரவீனா, பிரதீப் என அடுத்தடுத்து விவாதம் செய்து கேப்டன் மேச்சை வாங்கினார்கள்.
போட்டியாளர்கள் வந்த முதல் நாளே முதல் கேப்டன் பதவிக்காக விவாதம் வைத்து போட்டியாளர்களை போடவிட்டுள்ளார் பிக் பாஸ். கடைசியில் கேப்டன் பதவியை யார் பெறப் போகிறார்கள் என்பதை பொருத்து இருந்து பார்க்கலாம்.