பிக்பாஸ் அபிநயின் மனைவி தலைமறைவு- வலைவீசும் போலீஸ்..!!

பழம்பெரும் நடிகை சாவித்திரியின் பேரனும் நடிகருமான அபிநயின் மனைவி அபர்ணா தலைமறைவாகியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
 
abinai

தமிழில் ராமானுஜம், சென்னை 600028, விளம்பரம் போன்ற படங்களில் நடித்தவர் அபிநய் வாடி. இவர் மறைந்த திரை பிரபலங்களான ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரியின் பேரன் ஆவார். இவருக்கு சொந்தமான துணிக் கடை சென்னையில் இயங்கி வருகிறது. அதற்கான ஆடை வடிவமைப்பு பணிகளை மஞ்சு என்பவர் மேற்கொண்டு வருகிறார். 

அண்மையில் மஞ்சுவின் மகள் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு, மருத்துவம் படிக்க முயற்சித்துள்ளார். அதற்காக நீட் தேர்வெழுதி தேர்ச்சியும் பெற்றுவிட்டார். ஆனால் எதிர்பார்க்கும் கல்லூரியில் இடம் கிடைக்காமல் இருந்துள்ளது. இதுகுறித்து அபிநயின் மனைவி அபர்ணாவிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அபர்ணா, தனக்கு தெரிந்தவரிடம் பேசி உதவுவதாக கூறி மஞ்சுவிடமிருந்து ரூ. 5 லட்சம் முன்பணம் பெற்றுள்ளார்.

அதை நம்பி மஞ்சுவும் அபர்ணாவின் வங்கிக் கணக்குக்கு ரூ. 5 லட்சம் அனுப்பி வைத்துவிட்டார். அடுத்த இரண்டு நாட்களில் மாணவிக்கு கல்லூரியில் படிக்க இடம் கிடைத்துவிட்டதாகக் கூறி சான்றிதழ் ஒன்றை அபர்ணா மஞ்சுவிடம் கொடுத்துள்ளார். அதை எடுத்துக் கொண்டு கல்லூரிக்கு சென்ற மஞ்சுவுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது.

காரணம், அபர்ணா கொடுத்த அந்த சான்றிதழ் போலியாகும். தான் ஏமாற்றப்பட்டுவிட்டதை அறிந்து உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் மஞ்சு. அதையடுத்து அபர்ணா மற்றும் அவருடய நண்பர் மீது போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

அவரை கைது செய்ய கடைக்கு சென்று பார்த்தபோது, அபர்ணாவை  காணவில்லை. இதனால் அவர் தலைமறைவாகிவிட்டதாக போலீசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
 

From Around the web