சொகுசு ரக காரை வாங்கிய பிக்பாஸ் தனலட்சுமி..!!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சர்ச்சை போட்டியாளர் என்று பெயர் பெற்ற தனலட்சுமி சொகுசு ரக காரை சொந்தமாக வாங்கியுள்ளார்.
 
dhanalakshmi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய பார்வையாளர் வட்டம் உண்டு. இதுவரை 6 சீசன்கள் ஒளிபரப்பாகியுள்ள இந்நிகழ்ச்சியின் 7வது சீசன் விரைவில் துவங்கப்படவுள்ளது. அதற்காக தமிழக தொலைக்காட்சி பார்வையாளர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

முன்னதாக ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6-ல்  ஈரோடு மாவட்டத்தில் இருந்து பங்கேற்றவர் தனலட்சுமி. இவர் டிக்டாக், ரீல்ஸ் போன்ற சமூகவலைதளத்தில் வீடியோ பதிவிட்டு பிரபலமானார். பிக்பாஸ் வீட்டுக்குள் சண்டையை ஏற்படுத்துவதும், சண்டைக்கு காரணமாக இருப்பதும் என பல்வேறு பிரச்னைகளை செய்து வந்தார்.

இதனால் அவருடைய விளையாட்டு நிகழ்ச்சிக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. அவர் நிகழ்ச்சியின் இறுதி வரை போட்டியிடலாம் என்று பலரும் எதிர்பார்த்தனர். அதேபோன்று நிகழ்ச்சியின் இறுதிவரை வந்தார், ஆனால் டைட்டிலை கைப்பற்ற முடியாமல் போனது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதும், விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் வெளியூர் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து பிரபலமாகி வருகிறார். வழக்கம்போல இன்ஸ்டா ரீல்ஸில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் தனலட்சுமி, தற்போது ஒரு காரை வாங்கியுள்ளார்.

கியா நிறுவனத்தின் ஹைரண்டு மாடல் சொகுசு காரை சொந்தமாக வாங்கியுள்ளார். அதுகுறித்த தகவலை புகைப்படத்துடன் இன்ஸ்டாவில் நடிகை தனலட்சுமி பகிர்ந்துள்ளார். புதியதாக கார் வாங்கியுள்ள தனலட்சுமிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
 

From Around the web