விரைவில் ஆரம்பமாகும் பிக்பாஸ் சீசன் 8ன் போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ..!

 
1

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசனை தொகுத்து வழங்குவது யார் என்ற கேள்வி எழுந்தது. அதில் சூர்யா, சிம்பு, அரவிந்த்சாமி, சரத்குமார், நயன்தாரா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன. ஆனாலும் தற்போது இறுதியாக விஜய் சேதுபதி, நயன்தாராவின் பெயர்கள்தான் லிஸ்டில் உள்ளன.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் எதிர்வரும் அக்டோபர் மாதம் ஆரம்பமாக உள்ள நிலையில், தற்போது அதற்கான போட்டியாளர் தேர்வு நடந்து வருகின்றது. இதில் கலந்து கொள்ள உள்ள பிரபலங்கள் பற்றிய விவரம் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னரான அர்ச்சனாவின் காதலர் எனக் கூறப்படும் அருண், பட வாய்ப்புக்காக சில வருடங்களாகவே போராடி வருகின்றார். தற்போது இவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறக்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஆகவே இந்த முறை அருண் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உறுதியாக உள்ளது.

இவரைத் தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த பரீனா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளாராம். இதைத் தொடர்ந்து டிடிஎஃப் வாசன் தன்னுடைய காதலி ஷாலினி ஜோயாவுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகின்றது. அதேபோல குக் வித் கோமாளி மூலம் பிரபலமான அஸ்வின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளாராம்.

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அஸ்வினுக்கும் சிவாங்கிக்கும் இடையே அதிகமாக கிசுகிசுக்கப்பட்டது. அதனால்  இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷிவாங்கியை களம் இறங்க முடிவு செய்து அவரையும் விஜய் டிவி தரப்பு அணுகி உள்ளதாம். மேலும் விஜய் டிவி தொகுப்பாளர்களும் பிக் பாஸ் வீட்டிற்கு களம் இறங்குவது வழமையாக உள்ளதால் இந்த முறை மாகாபா  செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கலக்கப்போவது யாரு காமெடியன் ராமனும் வீட்டுக்குள் நுழையலாம்.

அதேபோல காத்து மேல பாடல் மூலம் அதிக கவனம் பெற்ற கானா பாடகர் பால் டப்பா இந்த முறை பிக் பாஸ் வீட்டுக்கு செல்ல உள்ளதாகவும், பாடகி சுசித்ராவின் முன்னால் கணவர் கார்த்திக் குமாரும் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே போல சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக காணப்படும் அமலா ஷாஜியின்  பெயரும் இந்த பட்டியலில் அடிபடுகின்றது.

From Around the web