ஹீரோவாக மாறிய பிக்பாஸ் விஷ்ணு..!!

 
1

சின்னத்திரையில் பிரபல நடிகராக வலம் வந்தவர் விஷ்ணு சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற இவருக்கு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது .

அந்த நிகழ்ச்சியில் இறுதி வரை வந்த அவர் 4ம் ரன்னர் அப் என அறிவிக்கப்பட்டார் அதே சீசனில் பாதியில் வந்த அர்ச்சனா அசால்ட்டாக டைட்டிலை வென்று கெத்து காட்டினார்.

இந்நிலையில் விஷ்ணுவுக்கு ஹீரோ ஆகும் வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளதாக லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது .

தெலுங்கில் சூப்பர்ஹிட் ஆன படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் விஷ்ணு ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் இந்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறப்படுகிறது.

From Around the web