த்ரிஷாவுக்கு நிச்சயக்கப்பட்ட நபருடன் டேட்டிங்- மனம் திறந்த பிந்து மாதவி..!!

நடிகை த்ரிஷாவுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளையுடன் டேட்டிங் சென்றீர்களா என்று முன்வைக்கப்பட்ட கேள்விக்கு, நடிகை பிந்து மாதவி கொடுத்துள்ள விளக்கம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
 
bindu madhavi

ஆந்திராவைச் சேர்ந்த பிந்து மாதவி, மாடலிங் செய்வதற்காக சென்னைக்கு வந்திருந்த போது சினிமா வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இதன்மூலம் சில தமிழ் படங்களில் நடித்தார். ஆனால் எதுவும் பெரியளவில் வெற்றிபெறவில்லை. அதேபோன்று தனது தாய்மொழியான தெலுங்கிலும் அவர் நடித்தார். அதுவும் கைக்கூடவில்லை.

அந்த சமயத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். நிகழ்ச்சியின் இறுதிவரை சென்றாலும் அவரால் வெற்றி அடைய முடியவில்லை. அதையடுத்து தெலுங்கில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கு நிகழ்ச்சியில் இறுதிவரை இருந்து டைட்டில் பட்டத்தை வாங்கினார்.

இதன்மூலம் தெலுங்கு சினிமாவில் பிந்து மாதவி சற்று பரபரப்பாக வலம் வருகிறார். அண்மையில் அவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், திரிஷாவின் முன்னாள் காதலர் வருண் மணியம் என்பவரை டேட்டிங் செய்தது உண்மையா என்கிற கேள்வி பிந்து மாதவியிடம் முன்வைக்கப்பட்டது.

அதற்கு சற்றும் சலனமே இல்லாமல் ‘ஆமாம்’ என்று பதில் கூறினார். ஆனால் அந்த உறவை குறித்து பெரியளவில் எந்த தகவல்களையும் அவர் வெளியிடவில்லை. இதற்கிடையில் பிந்து மாதவியின் பதில் கோலிவுட் மற்றும் டாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இந்த தகவல் சார்ந்த உண்மையான ஆதாரங்களை தேடும் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளனர்.
 

From Around the web