பிளாக்பஸ்டர் படமான ‘மார்க் அன்டணி’ விரைவில் ஓடிடியில்... எதில் தெரியுமா ?

 
1

விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடித்த ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான இந்த படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஷாலுக்கு ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் இந்த படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் அக்டோபர் 13ம் தேதி அதாவது வரும் வெள்ளி அன்று அமேசான் ப்ரைம் ஓடிடியில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 

From Around the web