ஆடு பலி கொடுத்து ரஜினி கட்-அவுட்டுக்கு ரத்த அபிஷேகம்..!

 
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரத்த அபிஷேகம் செய்யும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அண்ணாத்த’. இதில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஜெகபதி பாபு, சூரி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் ரசிகர்கள் அண்ணாத்த பட போஸ்டரை கட்-அவுட்டாக டிசைன் செய்து வைத்தனர்.

அதில் திருச்சி மாவட்ட ரசிகர்கள் அண்ணாத்த பட கட்-அவுட்டுக்கு ஆடு வெட்டி ரத்த அபிஷேகம் செய்துள்ளனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும் ரசிகர்களுக்கு கண்டனத்தை பதிவிட்டுள்ளனர்.

முன்னதாக நடிகர் கிச்சா சுதீப்புக்காக அவருடைய தெலங்கானா ரசிகர்கள் சிலர் எருமையை வெட்டி பலிகொடுத்திருந்தனர். அப்போது பீட்டா அமைப்பு கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

From Around the web