செல்வராகவனை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்..!

 
1

நடிகர் தனுஷின் சினிமா கேரியரில் மிகப் பெரிய தூணாக இருந்தவர் இயக்குநர் செல்வராகவன்…துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை போன்ற படங்களில் தனுஷை விதவிதமான கேரக்டரில் நடிக்க வைத்து வேற லெவல் நடிகர் ஆகிவிட்டார் அவர்.

இயக்குனராக மட்டும் அல்லாமல் கடந்த சில மாதங்களாக நடிப்பில் கவனம் செலுத்தி வரும் செல்வராகவன் பீஸ்ட், சாணி காயிதம், நானே வருவேன், பகாசூரன், ஃபர்ஹானா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அதேநேரம் சமூக வலைத்தளங்களிலும் அடிக்கடி செல்வராகவனின் ட்விட் பார்க்க முடிகிறது. சக இயக்குநர்கள் நடிகர்கள், நல்ல திரைப்படங்களை பாராட்டி டிவிட்டரில் தனது கருத்தை ஷேர் செய்து வருகிறார்.

அதுமட்டும் இல்லாமல் செல்வராகவன் அடிக்கடி கருத்து சொல்வதும் தத்துவம் பேசுவதும் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அப்படி அவர் தற்போது ட்வீட் செய்த ஒரு தத்துவத்தை ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார். எதை சொல்ல வந்தாலும் இதை சொல்லலாமா என சில நொடிகள் யோசித்து விட்டு சொல்லுங்கள். 90 சதவீதம் பிரச்சனைகள் அதிலேயே ஓய்ந்து விடும் என ட்வீட் செய்துள்ளார் செல்வராகவன்.

இதனை சூப்பரான தத்துவம் என செல்வராகவனின் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வந்தனர். இதனால் கோபமடைந்த ப்ளூ சட்டை மாறன்,அடேய் Boomer Boys.. என்னை மாதிரி ஆளுங்களை மட்டும்தான்டா பூமர்னு சொல்லி அடிக்கிறீங்க. இவர மாதிரி செலப்ரிட்டிங்க போடுற ‘அரிய’ தத்துவங்களுக்கு மட்டும் சூப்பர் சார், அருமை என கமண்ட் போட வேண்டியது.நீங்கதான்டா ஒண்ணா நம்பர் Cringe and Boomer Boys என கலாய்த்துள்ளார்.

இதனைப் பார்த்த செல்வராகவன் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். அதாவது செல்வராகவன் எடுத்தது ஆயிரத்தில் ஒருவன், ஆண்டி இண்டியன் இல்லை என கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.பலரும் ப்ளூ சட்டையை காரி துப்பி வருகின்றனர்..


 


 

From Around the web