நிஜ கொள்ளை சம்பவத்தை மையமாக வைத்து உருவானது ஜப்பான் திரைப்படம் : ப்ளூ சட்டை மாறன்..! 
 

 
1

நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நிஜ கொள்ளை சம்பவத்தை மையமாக வைத்து ஜப்பான் படம் உருவானதாக ப்ளூ சட்டை மாறன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது "லலிதா ஜூவல்லரியில் தங்க நகைகளை திருடி பரபரப்பை உண்டாக்கிய முருகனின் கதைதான் கார்த்தி நடித்துள்ள ஜப்பான். என பதிவிட்டுள்ளார்   


யார் இந்த கொள்ளையன் முருகன் :

திருச்சி மெயின் கார்டு கேட்  அருகே உள்ள  லலிதா ஜுவல்லரி கடையில்  சுவரில் துளையிட்டு கொள்ளை அடித்த மிகப்பெரிய பரபரப்பான சம்பவத்திற்கு  முருகன் தான் காரணம்.  

இந்த வழக்கில்  எந்தவித துப்பும் துலக்க முடியாத நிலையில் திருவாரூர் போலீஸார் மேற்கொண்ட வாகன சோதனையில்  கிடைத்த தகவல்களை வைத்து திருவாரூர் முருகன் தான் முக்கிய சூத்திரதாரி என்று கண்டறிந்து போலீஸார் அவரை கைது செய்தனர்.  அந்த வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது எய்ட்ஸால் பாதிக்கப்பட்டிருந்த முருகன் மேலும் உடல் நலம் குன்றி உயிரிழந்தார். 

அந்த திருவாரூர் முருகன் நடத்திய  நகைக்கடை கொள்ளையை தழுவி தான் ’ஜப்பான்’ படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.  ஆனால் அதே நேரத்தில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டு காலமான நிகழ்வை மட்டும் இயக்குநர் ராஜூ முருகன் மாற்றியமைத்தாராம்.

From Around the web