லால் சலாம் படத்தை கிழித்து தொங்கவிட்ட ப்ளூ சட்டை மாறன்..! 

 
1

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற வெற்றிப் படத்தை கொடுத்த ரஜினிகாந்த், இந்த ஆண்டு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஜெயிலர் படத்திற்கு பிறகு ஜெய் பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து வருகிறார். இப்படத்திற்கு வேட்டையன் என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ரித்திகா சிங், ராணா, மஞ்சு வாரியார், துஷாரா விஜயன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில்  ரஜினி படம் ரிலீஸ் என்கிற மாஸ் இல்லாமல் சத்தமின்றி வெளியாகியுள்ளது லால் சலாம் திரைப்படம். இந்த படத்தில் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.படத்தில் சுமார் ஒரு மணி நேரம் வரை தோன்றும் ரஜினியின் கதாபாத்திரம் மதநல்லணக்கத்தை பேசும் விதமாக அமைந்திருக்கிறது.

ப்ளூசட்டை மாறன் விமர்சனம்

90களில் நடக்கும் பீரியட் படம் போல இந்த படத்தை உருவாக்கி இருப்பதாக காட்டுகின்றனர். ஆனால், அதற்கான எந்த மெனக்கெடலும் தெரியவில்லை. படத்தை பார்த்தால் 90 வருஷத்துக்கு முன்னாடி எடுத்த படம் போல உள்ளது.எந்த கதாபாத்திரமும் மனதில் ஒட்டவில்லை. தலைவரு கர்சிப் விக்க பாம்பே போய் டான் ஆகியிருக்காறு. வில்லன் கேரக்டரும் படு மொக்கையாக இருந்தது. படத்தின் ஹீரோவாக விஷ்ணு விஷாலை தான் காட்டுகின்றனர். அவர் கிரிக்கெட் விளையாடுறாரா, லவ் பண்றாரா, ஊரை காப்பாத்த போறாரா என எதுவுமே சரியா தெரியாத அளவுக்கு அவரது கதாபாத்திரத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வடிவமைத்து இருக்கிறார்.

இந்த படம் வரதுக்கு முன் பிளாப்ன்னு உறுதியாகிடுச்சு. பட புரொமஷனில் எங்கப்பா சங்கி இல்லன்னு சொன்னார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஆரஞ்சு பழத்துக்கு ஆரஞ்சு பெயிண்ட் அடிச்சதான் தெரியுமா?இன்னும் தலைவரு நம்ம பைத்தியகாரன்னே நினைச்சிட்டு இருக்காரு. அது உண்மைன்னா படத்தை பார்க்கலாம்" என்று காலாய்த்து தள்ளியுள்ளார்.

From Around the web