ஜெயிலர் படத்தின் ஐந்து நாள் வசூலை பார்த்து ப்ளூ சட்டை மாறன் போட்ட பதிவு..!

 
1

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த திரைப்படம் வெளியாகி 5 நாள் ஆகும் நிலையில் 5 நாள் முடிவில் 350 கோடி வசூல் செய்திருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இவரது இந்த பதிவை பார்த்த ப்ளூ சட்டை மாறன் வடை சுடும் மெஷின் வீடியோவை வெளியிட்டு பங்கமாக கலாய்த்து உள்ளார். வசூல் என்ன என்பது இன்னும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே ஓபனாக சொல்லவில்லை அப்படி இருக்கையில் நீ சூப்பரா வடை சுடுற என கலாய்த்துள்ளார்.

இவருடைய இந்த பதிவுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு எதிர்ப்பு என இரண்டும் குவிந்து வருகிறது.


 

From Around the web