வைரலாகும்  ‘ப்ளூஸ்டார்’ நடிகரின் நெகிழ்ச்சி பதிவு..!

 
1

பா.ரஞ்சித்தின் நீலம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார்.கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தில் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க அசோக் செல்வனுக்கு ஜோடியாக அவரது காதல் மனைவி கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளார் .

மினிமம் படிஜட்டில் உருவாகியுள்ள இப்படத்தில் அசோக் மற்றும் கீர்த்தி சாந்தனு ஆகியோருடன் பிருத்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படம் கடந்த மாதம் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது .

வெளியான நாள் முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி நடை போட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகர், இயக்குனர் பாண்டியராஜன் மகன் பிருத்விராஜன் நடித்துள்ள நிலையில் அவரது நடிப்பிற்கு ஏற்கனவே விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அமேசானில் தனது தந்தை பாண்டியராஜன் ‘ப்ளூஸ்டார்’ படத்தை பார்த்த போது, அதில் தன்னுடைய காட்சி வரும்போது அவர் மகிழ்ச்சி அடைந்ததை பார்த்து நெகிழ்ச்சியுடன் பதிவு ஒன்றை போட்டுள்ளார் நடிகர் பிருத்விராஜன் .

‘ப்ளூஸ்டார்’ படத்தில் என்னை பார்த்த போது உங்கள் முகத்தில் பூத்த சந்தோசமே எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெகுமதியாக கருதுகிறேன்.

உங்களை இந்த அளவுக்கு மகிழ்ச்சியுடன் பார்க்கும்போது என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு உற்சாகத்தை உணர்கிறேன், உங்களை என்றும் நேசிக்கிறேன்’ என நடிகர் பிருத்விராஜன் தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.


 


 

From Around the web