போடுற வெடிய... விரைவில் ஒடிடியில் வெளியாகிறது வாரிசு - அதிகாரபூர்வ அறிவிப்பு..!!  

 
1

நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ படம் கடந்த மாதம் 11 ஆம் தேதி பொங்கல் விருந்தாக திரையரங்கில் வெளியானது. தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் உருவான இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன் நிறுவனம் சார்பில் தில் ராஜூ தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். அவரது இசையில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

 குடும்ப பின்னணியில் உருவாகி வெற்றிப் பெற்றுள்ள இந்த படத்தில் ஆக்ஷன், எமோஷனல், காதல் ஆகியவை இடம்பெற்றது. இந்த படத்தில் ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷ்யாம், ஜெயசுதா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.‌ இந்த படத்தில் தமன் இசையில் உருவான ‘ரஞ்சிதமே’, ‘தீ தளபதி’ ஆகிய பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

1

25 நாட்களை கடந்து திரையரங்கில் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த படம் தற்போது 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ‘வாரிசு’ படக்குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் இப்படம் விரைவில் ஒடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இன்று அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது அதாவது வரும் 22 ஆம் தேதி ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது   

1

பிரைம் வீடியோவில் இந்தத் திரைப்படத்தின் ஸ்ட்ரீமிங் வெளியீடு குறித்து  குறித்து கருத்து தெரிவித்த தளபதி விஜய், “ வாரிசு  எனக்கு மிகவும் சிறப்பாக அமைந்த ஒரு படம். ஒரு பிரும்மாண்டமான  பின்னணியைக் கொண்ட கதையாக இது இருந்தாலும், அடிப்படையில் ஆழ்ந்த உணர்ச்சி மிக்க குடும்ப உறவுகளைப் பற்றி பேசும் ஒரு படம். . மேலும் திரைப்படத்தின் உருவாக்கத்தின் போது நாங்கள் அற்புதமாக உணர்ந்தோம், மேலும் இந்தத் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்து ரசித்த மக்களிடமிருந்து  இதுவரை நாங்கள்  பெற்ற பாராட்டையும், அன்பையும்  வரவேற்பையும் கண்டு நாங்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தோம். மேலும் இப்போது 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள எங்கள் ரசிகர்களும் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் செய்யப்படும் இந்தப் படத்தை கண்டு மகிழமுடியும் என்பதை அறியும் போது நாங்கள் மென் மேலும் உற்சாகமடைகிறோம்” என்று கூறினார். 

From Around the web