பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு கௌரவ விருது...!
யாதோன் கி பாரத் சினிமா மூலம் பாலிவுட்டில் நுழைந்த அமீர்கான். 'கியாமத் சே கியாமத் தக்' படத்தில் முதன்மை கதாபாத்திரம் ஏற்று நடித்தார் அந்த படத்தின் வெற்றி அவரை நடிகராக பிரதிபதித்தது. அதனை அடுத்து அவர் நடித்த ஒவ்வொரு படமும் அவரை இன்னும் உயர்த்தியது.
இவர் நடிப்பில் லகான் ,ரங்க் தே பசந்தி, கஜினி, 3 இடியட்ஸ், தூம் 3,பி.கே., தங்கல் போன்ற படங்கள் அமீர்கான் நடிப்பில் உச்சம் தொட்ட படங்களாக பார்க்கப்படுகின்றன. இதில் 'பி.கே.' படம். பாலிவுட்டில் முதன் முறையாக ரூ.800 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த படம் என்ற சிறப்புக்குரியது.
ஆஸ்கார் விருதை வென்ற ஹாலிவுட் படம் 'பாரஸ்ட் கம்ப்.' இந்தப் படத்தைத்தான் சிறிய மாற்றங்களுடன். ரீமேக் செய்து 'லால் சிங் சத்தா' என்ற பெயரில் எடுத்திருந்தார் அமீர்கான். இவரின் நடிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பினை பெற்றாலும் வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்தது.
இந்நிலையில் சவுதி அரேபியா ஜெட்டாவில் வரும் 14ம் தேதிவரை செங்கடல் திரைப்பட விழா நடைபெறவிருக்கிறது. இதன் துவக்க விழாவில் கலந்து கொண்ட எகிப்திய நடிகை மோளா ஜூகி உடன் அமீர்கானுக்கு கவுரவ விருது அளிக்கப்பட்டது. உலக சினிமாவில் அமீர்காளின் பங்களிப்பை பாராட்டும் விதமாக இந்த கவுரவம் செய்யப்பட்டாதாக விழாக் குழுவினர் தெரிவித்துள்ளார்கள். இதனால் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.