பிரபல பாலிவுட் நடிகர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
மை நேம் இஸ் கான் மற்றும் ராகினி எம்எம்எஸ் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் பர்வின் தபாஸ். இவர் ப்ரோ பாஞ்சா லீக் போட்டியின் இணை நிறுவனரும் ஆவார். தற்போது மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் பர்வின் தபாஸ் எதிர்பாராத விதமாக விபத்தொன்றில் சிக்கியுள்ளார். இந்த தகவல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு விபத்தில் சிக்கிய நடிகர் பர்வின் தபாஸ் அவருக்கு, பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றதாம், அவரது மனைவி நடிகை பிரீத்தி மருத்துவமனையில் இருந்து அவரை கவனித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
இந்த விபத்து தொடர்பில் இதுவரையில் முழுமையான விபரம் இன்னும் வெளி வரவில்லை. எனினும் இந்த விபத்து குறித்து ப்ரோ பாஞ்சா லீக்கின் நிர்வாகிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
குறித்த அறிக்கையில் துரதிஷ்டவசமாக கார் விபத்தில் சிக்கிய பர்வீன் தபாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சவாலான நேரத்தில் எங்கள் எண்ணங்கள் பர்வீன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் உள்ளன. பர்வீன் விரைவாக குணமடைய வாழ்த்துகின்றோம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்கள்.