பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தாயார் காலமானார்..!

 
தாயாருடன் நடிகர் அக்‌ஷய் குமார்

மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறை காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் அக்‌ஷய் குமாரின் தாயார் அருணா பாட்டியா சிகிச்சை பலனின்றி காலமானார்.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அக்‌ஷய் குமார். இவர் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில், தனது தாயார் அருணா பாட்டியாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர் மீண்டு வர அனைவரும் பிரார்த்தனை செய்யவேண்டும் என பதிவிட்டு இருந்தார்.

பிறகு ரஞ்சித் எம். திவாரி இயக்கி வரும் ‘சிண்ட்ரெல்லா’ படத்தில் நடிப்பதற்காக அவர் லண்டன் சென்றுவிட்டார்.  அதை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்த தாயார் அருணா பாட்டியாவின் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் உடனடியாக அக்‌ஷய் குமார் மும்பை திரும்பினார்.

இந்நிலையில் இன்று அக்‌ஷய் குமாரின் தாயார் அருணா பாட்டியா மருத்துவமனையில் காலமானார். இதை அக்‌ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இதனால் ரசிகர்களும் மும்பை திரைப் பிரபலங்கள் பலரும் அக்‌ஷய் குமார் மற்றும் அவருடைய குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

From Around the web