பாலிவுட் நடிகர் திலீப் குமார் காலமானார்..!

 
திலீப் குமார்

பாலிவுட் சினிமாவின் மூத்த நடிகர் திலீப் குமார் மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 98.

கடந்த ஜூன் 6-ம் தேதி மூச்சு திணறல் காரணமாக முதன்முறையாக திலீப் குமார் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்தது. இந்நிலையில் இன்று அவருடைய உயிர் பிரிந்தது.

கடந்த 1922-ம் ஆண்டு பாகிஸ்தானில் பிறந்த திலீப்குமாரின் இயற்பெயர் முகமது யூசுப் கான். பாலிவுட் சினிமாவில் உச்சநட்சத்திரமாக திகழ்ந்த இவருக்கு, நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான தாதா சாகேப் பால்கே விருது கடந்த 1994-ம் ஆண்டு வழங்கப்பட்டது.

இந்தி சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்த திலீப்குமார் இதுவரை 65-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் அவர் பதவி வகித்துள்ளார். இவருடைய நடிப்பில் வெளியான பல்வேறு படங்கள் இன்றும் இந்தி சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

From Around the web