பாலிவுட் நடிகர் இர்பான் கானுக்கு ஆஸ்கர் விழாவில் அஞ்சலி..!

 
பாலிவுட் நடிகர் இர்பான் கானுக்கு ஆஸ்கர் விழாவில் அஞ்சலி..!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த பாலிவுட் நடிகர் இர்பான் கானுக்கு 93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

சினிமா துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரிமோட் மூலம் நடந்து முடிந்தது. விழாவில் பங்கேற்ற அனைத்து கலைஞர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் விழா நடைபெற்றது. 

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலஸில் இருந்து கலந்துகொண்ட விழாக் குழுவினர் இந்திய நடிகர் இர்ஃபான் கானுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இவருடன் கடந்தாண்டு உயிரிழந்த மற்ற கலைஞர்கள், திரைப்பட பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்தியில் திரைப் பயணத்தை துவங்கிய நடிகர் இர்பான் கான், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். அதேபோல ஹாலிவுட்டில் தயாரான லைப் ஆஃப் பை, ஸ்பைடர்மேன், ஜுராசிக் வேர்ல்டு போன்ற உலகளவில் ஹிட்டான படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகர் இர்பானை கானை தவிர்த்த், இந்தியாவில் ஆஸ்கர் விருது வென்ற முதல் நபர் பாணு அத்தையா. காந்தி படத்தில் சிறந்த ஆடை வடிவமைப்புக்கான பிரிவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. அவரும் கடந்தாண்டு காலமானார். அவருக்கும் இந்த விழா மேடையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 
 

From Around the web