பிரபல பாலிவுட் நடிகர் ஜெயந்த் சாவர்க்கர் உடல் நலக்குறைவால் காலமானார்..!

 
1

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் நடிகர் ஜெயந்த் சாவர்க்கர். இவர் மராத்தி மற்றும் இந்தி மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்த இவர், பின்னர் மராத்தி மற்றும் இந்தி படங்களில் நடித்து பிரபலமானார்.

Jayant Savarkar

குறிப்பாக ஹரி ஓம் விதாலா, 66 சதாசிவ், சிங்கம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இவருக்கு உஷா பென்ட்சே என்ற மனைவியும், இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில், வயது முதிர்வு மற்றும் ரத்த அழுத்தம், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன் ஜெயந்த் தானேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கபப்ட்டு வந்த நிலையில் ஜெயந்த் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

RIP

இவரது மறைவிற்கு பாலிவுட் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், திரையுலகினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

From Around the web