அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்..!

 
1

முன்னனி நடிகையான சமந்தா, கடந்த சில வருடத்திற்கு முன் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் தொடர் சிகிச்சை எடுத்து வரும் போதும், அந்த நோயிலிருந்து சமந்தா பூரணமாக குணம் அடையவில்லை. அதே போல நடிகர் பகத் பாசில், மூளை நரம்புகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஏடிஹெச்டி என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக பேட்டியில் கூறினார். இது கவனக்குறைவு, நரம்பியல் வளர்ச்சி கோளாறு, உந்துவிசை கட்டுப்பாட்டை கட்டுப்படுத்தும் திறனை பாதிக்கும். இது குழந்தைகளில் பொதுவானது ஆனால், பெரியவர்களையும் அரிதாக பாதிக்கும் என கூறப்பட்டது.

இந்நிலையில், இந்தி நடிகை ஆலியா பட் அண்மையில் அளித்த பேட்டியில், தனக்கு ADD எனும் நோய் இருப்பதாக கூறியுள்ளார். அதாவது, Attention Deficit Disorder (ADD) என்ற நோய் இருப்பதாக கூறி இருக்கிறார். இந்த நோய் இருப்பதால் தன்னால் ஒரு விஷயத்தில் 45 நிமிடங்களுக்கு மேல் கவனம் செலுத்த முடியாது என்று கூறியுள்ளார். என் திருமணத்திற்காக மேக்கப் கலைஞர் புனித் பி.சைனி, இரண்டு மணி நேரம் அவகாசம் கேட்டார். ஆனால், நான் (ADD) என்ற நோய் இருப்பதை காரணம் காட்டி முடியவே முடியாது என்று சொல்லிவிட்டான். இதனால், என் திருமணத்தில் மிகவும் குறைந்த நேரம் தான் மேக்கப் போடப்பட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ADD என்பது ஒரு நரம்பியல் தொடர்பான பிரச்சனையாகும், இது கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி கோளாராகும். இதனால் எந்த ஒரு வேலையிலும், செயலையும் கவனமாக செய்ய முடியாது, இதனால் வேலையில் அடிக்கடி கவன சிதறல் ஏற்படும். இதனால் சரியான நேரத்தில் பணிகளை முடிக்க முடியாது என்று கூறப்படுகிறது. ஆலியா பட்டின் இந்த அரிய நோய் பற்றி தெரிந்து கொண்ட ரசிகர்கள் அடப்பாவமே 31 வயதில் இப்படி ஒரு நோயா என கேட்டு வருகின்றனர்.

பாலிவுட்டின் சிறந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வந்த மகேஷ் பட்டின் மகளான ஆலியா பட், “Student of the year” என்ற திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து ஹிட் படத்தில் நடித்து வரும் ஆலியா பட், கங்குபாய் கத்யவாடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தேசிய விருதை பெற்றார். இவர், ரன்பீர் கபூருடன் இணைந்து பிரம்மாஸ்திரா படத்தில் இணைந்து நடித்த போது இருவரும் காதலித்தனர். இதையடுத்து 2022ம் ஆண்டு இவர்களுக்கு கோலாகலமாக திருமணம் நடந்தது. தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் தொடர்ந்து திரைப்படத்தில் ஆலியா பட் நடித்து வருகிறார். சஞ்சய் லீலா பஞ்சாலி இயக்கத்தில் ‘லவ் அண்ட் வார்’ என்ற படத்திலும் நடித்துள்ளனர். இந்த படத்தில் விக்கி கவுசல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

From Around the web