மகாத்மா காந்தி, நேரு குறித்து பாலிவுட் நடிகை அவதூறு பேச்சு ..!!

 
1

பாலிவுட் திரை உலகின் பிரபலமான நடிகைகளில் பயல் ரோஹதியும் ஒருவர். 36 வயதான இவர் பல்வேறு திரைப்படங்களிலும், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் நடித்துள்ளார்.

இதற்கிடையில், மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர்கள் ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் குறித்து நடிகை பயல் ரோகதி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அவர் பேசும் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மகாத்மா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை பயல் மீது புனே நகர காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரையடுத்து, நடிகை பயல் ரோஹதி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From Around the web