பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்த வீட்டில் குடியேறிய பிரபல நடிகை..!
Jun 10, 2024, 07:35 IST
எம்.எஸ் தோனி அன்டோல்ட் ஸ்டோரி என்ற தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து எண்ணற்ற ரசிகர்களின் மனதில் குடி புகுந்தவர் தான் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங். இவர் கடந்த 2020 ஆண்டு அவரது அபார்ட்மெண்ட் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தி பலரையும் கண்ணீர் சிந்த வைத்தது. இதையடுத்து சுஷாந்த் சிங் வாழ்ந்த அந்த வீடு பூட்டிய நிலையில் தான் இருந்தது.
இந்நிலையில் அந்த அபார்ட்மெண்ட் வீட்டை நடிகை அடா ஷர்மா வாங்கி உள்ளதாக தகவல் பரவிய நிலையின் இன்று அவர் அந்த வீட்டிற்கு குடியேறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
இதையடுத்து அடா ஷர்மாவுக்கு அவரது ரசிகர்கள் உள்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.