மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் தங்கியிருந்த வீட்டை வாங்கிய பிரபல பாலிவுட் நடிகை..!

 
1
தமிழில் பிரபுதேவா ஜோடியாக சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்துள்ளார் நடிகை அடா ஷர்மா.இவரது தந்தை தமிழ்நாட்டை சேர்ந்தவராகவும், தாய் மும்பையை சேர்ந்தவர்களாக உள்ளனர். மும்பையில் பிறந்து வளர்ந்த அடா ஷர்மா, அங்கேயே செட்டிலாகியுள்ளார்.

கடந்த மே மாதம் வெளியான தி கேரளா ஸ்டோரி படம் மூலம் பிரபலமான இவர் நடித்திருக்கும் புதிய வெப்சீரிஸான கமாண்டே டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரிஸ் கடந்த வாரம் வெளியானது. இதையடுத்து மறைந்த பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் 2020இல் இறப்பதற்கு முன் மும்பையில் தங்கியிருந்த பிளாட்டை அடா ஷர்மா வாங்கியுள்ளாராம்.

மும்பை பந்த்ரா பகுதியில் இருக்கும் மாண்ட் பிளாங்க் அப்பார்ட்மெண்டில் , சுஷந்தா குடியிருந்த வீட்டை இவர் வாங்கியிருப்பதாக பாப்ராஸி பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

இந்த தகவல் வைரலான நிலையில், இதனை அடா ஷர்மாவுக்கு நெருக்கமானவர்களும் உறுதிபடுத்தியுள்ளனர். அதேசமயம் அவர் எப்போது அங்கு குடியேறபோகிறார் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.

From Around the web