தமிழ் படங்களை கொண்டாடும் பிரபல பாலிவுட் இயக்குநர் மருத்துவமனையில் அனுமதி..!

 
அனுராக் கஷ்யப்

பாலிவுட் சினிமாவில் மாற்று சினிமாவுக்கு வழிவகுத்தவரும் தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகருமான அனுராக் கஷ்யப் இதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியில் தேவ் டீ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அனுராக் கஷ்யப். பாலிவுட் சினிமாவின் போக்கை மாற்றியவர்களில் இவருக்கு முக்கிய பங்குள்ளது. பாண்டிச்சேரியை சேர்ந்த பிரபல நடிகை கல்கி கோச்லினை திருமணம் செய்து, பிறகு  அவரிடம் இருந்து விவகாரத்து பெற்றார்.

தற்போது முதல் திருமணத்தின் போது அவருக்கு பிறந்த மகளுடன் மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருக்கு திடீரெனறு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

அதில் அனுராக் கஷ்யப்பின் இதயத்தில் செல்லும் குழாய் நிறைய அடைப்புகள் இருப்பது தெரிந்தது. தற்போது அவனை அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அனுராக் நலமுடன் இருப்பதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். விரைவில் அனுராக் நலமுடன் திரும்ப வேண்டும் என பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் வாழ்த்து கூறியுள்ளனர்.

தமிழில் நயன்தாரா, அதர்வா நடிப்பில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அனுராக் மிரட்டும் வில்லனாக நடித்திருந்தார். மேலும், தமிழ் சினிமாவில் அமீர் சுல்தான், பாலா, சசிகுமார் ஆகிய இயக்குநர்களின் தீவிர விசிறி ஆவார். அனுராக் கஷ்யப்புக்கு உலகளவில் புகழை வழங்கிய படம் ‘கேங்கஸ் ஆஃப் வாசேப்பூர்’. இந்த படத்தின் டைட்டில் கார்டில் இம்மூன்று இயக்குநர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

From Around the web