சூப்பர் ஸ்டார் நடிகரின் மகன் ஓரினச்சேரிக்கையாளரா? பரபரக்கும் ட்வீட்..!!
இந்தி சினிமாவின் பழம்பெரும் நடிகையான ஷர்மிளா தாகூரின் மகன் தான் சையிப் அலிகான். இவர் பாலிவுட் நடிகை கரீனா கபூரின் கணவர் ஆவார். அவருக்கு இவர் மூன்றாவது மனைவி தான். கரீனாவுக்கு முன்னதாக சையிஃப் அலிகான், அம்ரிதா சிங் என்கிற நடிகையை திருமணம் செய்திருந்தார்.
அவர்களுடைய குழந்தைகள் தான் சாரா அலிகான் மற்றும் இப்ரஹிம் அலி கான். ஏற்கனவே சாரா அலிகான் பாலிவுட் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார். விரைவில் இப்ரஹிம் அலிகானும் சினிமாவில் கால்பதிப்பார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் சையிப் அலிகான் மகன் இப்ரஹிம் ஓரினச்சேர்க்கையாளர் என்று சமூகவலைதளத்தில் உமைர் சாந்து என்பவர் ட்வீட் பதிவிட்டுள்ளார். இவர் அரபு அமீரகத்தின் திரைப்பட தணிக்கை குழுவில் உறுப்பினராக இருப்பதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான பதிவில் நடிகர் சையிப் அலிகான் மகன் ஒரு ஓரினச்சேர்க்கையாளர். அவர் இந்த தகவலை தனது பெற்றோர்களிடத்தில் கூறிவிட்டார். அடக் கடவுளே, நடிகர்களின் குழந்தைகளுக்கு என்ன தான் ஆச்சு? பலரும் தங்களை ஓரினச்சேர்க்கையாளராக சொல்லி கொள்கின்றனர் என்று உமைர் சாந்து தெரிவித்துள்ளார்.
ஆனால் இவர் ட்விட்டரில் பதிவிடும் எல்லாவிதமான தகவல்களும் உண்மையானவை என்று கூறிவிட முடியாது. அவருடைய ட்வீட் பதிவுக்கு எதிராக பலரும் கருத்து கூறி வருகின்றனர்.