விஜய்க்கு வில்லனாகும் பாலிவுட் ஹீரோ!! வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

 
11

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைககளின் பட்டியலை அதன் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ வெளியிட்டது.

இதில் விஜய்க்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிப்பது உறுதியாகியுள்ளது. இது குறித்து சஞ்சய் தத் கூறுகையில் கதையின் கருவை கேட்ட உடனேயே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும்,  படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளதாகவும கூறியுள்ளார்.

1

மேலும் இப்படத்தில் அர்ஜூன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், நடன இயக்குனர் சாண்டி, கவுதம் மேனன், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோரும் இணைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

From Around the web