பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் இயக்குநரான ராஜ்குமார் காலமானார்..! 

 
11

கஹானி கம் சப் கி எனும் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ்குமார் கோலி. தனது கதைகளின் மூலம் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் பல நல்ல படங்களை கொடுத்த ராஜ்குமார் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார் .

இந்தி மட்டுமின்றி குஜராத்தி மொழி படங்களையும் இயக்கியுள்ள ராஜ்குமார் வயது மூப்பு காரணமாக 20 ஆண்டுகளுக்கு முன்பே சினிமாவை விட்டு விலகி குடும்பத்தோடு அமைதியாக வாழ்ந்து வந்தார் .

இந்நிலையில் தற்போது வயது மூப்பு காரணமாக ராஜ்குமார் கோலி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . சமூகத்தில் நல்ல பல மாற்றங்களை கொண்டுவர நினைத்த ராஜ்குமார் கோலியின் மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From Around the web