பாம்பே ஜெய்ஸ்ரீ உடல்நிலை- மகன் வெளியிட்ட தகவல்..!!

பலதரப்பட்ட சிகிச்சைக்கு பிறகு பாடகி பாம்பே ஜெயஸ்ரீ நலமுடன் இருப்பதாக அவருடைய மகன் அமிர்த் ராம்நாத் தகவல் வெளியிட்டுள்ளார்.
 
bombay jayashri

கடந்த மார்ச் மாதம் பல்வேறு இசைநிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பாம்பே ஸ்ரீ பிரிட்டன் சென்றிருந்தார். அப்போது மார்ச் 25-ம் தேதி பிரிட்டனில் தான் தங்கியிருந்த அறையில் நினைவிழந்து மயங்கிக் கிடந்துள்ளார் பாம்பே ஜெய்ஸ்ரீ.

உடனடியாக அவர் வெஸ்ட்மினிஸ்ட் பகுதியிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட பரிசோதனையில் மூளையில் ரத்த உறைதல் ஏற்பட்டு, அவருக்கு குருதிநாள அழற்சி நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதற்காக பலதரப்பட்ட உயர் சிகிச்சைகள் அவருக்கு செய்யப்பட்டன. கடந்த ஒரு மாத காலம் மருத்துவமனையில் தங்கி அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.  தற்போது அவர் வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பாம்பே ஜெய்ஸ்ரீயின் உடல்நிலை குறித்து பேசிய அவருடைய மகன் அம்ரித் ராம்நாத், எனது தாயார் நலம்பெற வேண்டி வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி, இப்படிப்பட்ட கடினமான தருணத்தில் இருந்து நாங்கள் மீண்டு வர காரணமாக இருந்த நலம் விரும்பிகளுக்கும் நன்றி கூறுகிறேன். தற்போது தாயார் பாம்பே ஜெய்ஸ்ரீ உடல்நலம் தேறி வருகிறார். பிரிட்டனில் உள்ள உறவினரின் வீட்டில் ஓய்வில் இருக்கிறார். விரைவில் அவர் ரசிகர்களை சந்திப்பார் என்று கூறியுள்ளார்.
 

From Around the web