+2 தேர்வில் போண்டாமணி மகள் வெற்றி- கூப்பிட்டு சீட் கொடுத்த தயாரிப்பாளர்..!!!

நடிகர் போண்டாமணியின் மகள் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் எடுத்த மதிப்பெண்ணை பார்த்து, அவர் விரும்பிய பட்டப்படிப்புக்கு சீட் வாங்கிக் கொடுத்துள்ளார் பிரபல தயாரிப்பாளர்.
 
bondamani family

தமிழ் சினிமாவில் வடிவேலு, விவேக் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து காமெடியில் கலக்கியவர் போண்டாமணி. வடிவேலு சினிமாவில் நடிக்காமல் இருந்தது மற்றும் விவேக்கின் திடீர் உயிரிழப்பு உள்ளிட்ட காரணங்களால் போண்டாமணிக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது. 

அண்மையில் போண்டாமணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு காசில்லாமல் போனதை அடுத்து, திரையுலகத்தினர் தனக்கு உதவ முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதை தொடர்ந்து விஜய் சேதுபதி, தனுஷ், உள்ளிட்ட பலரும் தங்களால் முடிந்த அளவுக்கு நிதி உதவி செய்தனர். இதனால் நல்லபடியாக சிகிச்சை முடிந்து போண்டாமணி வீட்டுக்கு திரும்பினார்.

isari ganesh

இந்நிலையில் அவருடைய மகள் நடந்து முடிந்த பன்னிரெண்டாம் தேர்வில் 600-க்கு 400 மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து மருத்துவச் செலவுக்கு பணம் செலவாகி வருவதால், மகளை கல்லூரியில் சேர்க்க முடியாமல் போண்டாமணி தவித்து வந்துள்ளார். இந்த ரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கு தெரியவந்தது.

இதையடுத்து தனது வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் போண்டாமணி மகள் படிப்பதற்கு இடம் கொடுத்துள்ளார். அதுவும் அவர் விரும்பிய பி.சி.ஏ சீட் கொடுத்து கல்லூரியில் சேர்த்துவிட்டுள்ளார். மேலும் மாணவியின் கல்விச் செலவு முழுவதையும் தானே ஏற்றுக்கொள்வதாக ஐசரி கணேஷ் கூறியுள்ளார். இதற்கு போண்டாமணியும் அவருடைய குடும்பத்தினரும் ஐசரி கணேஷுக்கு நன்றி கூறியுள்ளனர்.
 

From Around the web