அஜித் பிறந்தநாளில் ஏமாறப்போகும் ரசிகர்கள்- போனி கபூர் அதிர்ச்சி அறிக்கை..!

 
அஜித் பிறந்தநாளில் ஏமாறப்போகும் ரசிகர்கள்- போனி கபூர் அதிர்ச்சி அறிக்கை..!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் வலிமை படத்தின் முதல் பார்வை போஸ்டர் வரும் மே 1-ம் தேதி வெளியாகாது என தயாரிப்பாளர் போனி கபூர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து, மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. சுமார் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக படமாக்கப்பட்டு வரும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹியூமா குரேஷி நடித்து வருகிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரும் மே 1-ம் தேதி அஜித்தின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு ‘வலிமை’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்படும் என ட்விட்டரில் அறிவித்தார் தயாரிப்பாளர் போனி கபூர்.

இதனால் படத்தை எதிர்நோக்கி காத்திருந்த ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்தனர். அதை தொடர்ந்து படத்தின் டீசர் மற்றும் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என போனி கபூர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகின. இதனால் மே 1-ம் தேதியை ஆவலுடன் எதிர்நோக்கி கோலிவுட் திரையுலகமே காத்திருந்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக வலிமை படத்தின் முதல் பார்வை போஸ்டர் திட்டமிட்டப்படி மே 1-ம் தேதி வெளியாகாது என போனி கபூர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது அஜித் உள்ளிட்ட சினிமா ரசிகர்களிடையே பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 

From Around the web