வலிமை பட வில்லன் பிறந்தநாளுக்கு சர்பரைஸ் செய்த போனி கபூர்..!

 

வலிமை படத்தில் வில்லனாக நடித்து வரும் கார்த்திகேயா பிறந்தநாளை முன்னிட்டு, அவருடைய கதாபாத்திர போஸ்டரை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார்.

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார், ஹியூமே குரேஷி உள்ளிட்டோர் நடித்து வரும் படம் வலிமை. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டாண்டுகளாக நடைபெற்று வந்தது. தற்போது படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

இந்த படத்தில் வில்லனாக தெலுங்கு சினிமாவை சேர்ந்த கார்த்திகேயா நடித்து வருகிறார். இவர் நேற்று தன்னுடைய 29-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதன்காரணமாக வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர், அந்த படத்தில அவருடைய கதாபாத்திர போஸ்டரை போனி கபூர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.




இதற்கு ரசிகர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்த போஸ்டர் வெளியீடு நடிகர் கார்த்திகேயாவுக்கே சர்பரைஸாக உள்ளது தான் இதிலுள்ள சிறப்பம்சம். போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் போனி கபூருக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

From Around the web